கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிவந்த கும்பல் கைது

0 474

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து கண்டறிந்து கூறிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சீங்கேரி கூட்டுச்சாலையில் உணவகத்துடன் கூடிய வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து ரகசியமாக செயல்பட்டு வந்த இந்த கும்பல், கர்ப்பிணிகளிடம் தலா 20 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு குழந்தைகளின் பாலினம் குறித்து கூறி வந்ததாகக் கூறப்படுகிறது.

கைதான 3 பெண்களில் கற்பகம் என்பவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றியதாகவும், 3 முறை இதே குற்றச்சாட்டில் கைதானவர் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments