ஆளை மாற்றிய காதலி.. ஏமாந்து போய் சோற்றில் விஷத்தை கலந்த காதலன்..! சாகும் தறுவாயில் நண்பனுக்கு சம்பவம்

0 1118

ஓசூர் அருகே காதலி தன்னை ஏமாற்றிவிட்டு நண்பனை காதலிப்பதை அறிந்த இளைஞர் ஒருவர், காதலிக்கு வீடியோ கால் செய்து, உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கக்கதாசம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகேஷ். டெம்போ டிரைவரான இவரும், ஒசூர் மாநகராட்சி பேகேப்பள்ளியை சேர்ந்த பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அந்தப்பெண்ணுடன் அகேஷ் தினந்தோறும் பலமுறை வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதற்கிடையே அகேஷை காதலித்த அந்தப்பெண், அகேஷின் நண்பனான சரண் என்பவருடனும் நட்பாக பழகி அவரையும் தனது காதல் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண் அகேஷை கழற்றிவிட்டதால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அகேஷ் விபரீத முடிவெடுத்தார். தான் தற்கொலை செய்துகொள்வதை தனது காதலி பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த பெண்ணை வீடியோ காலில் அழைத்துள்ளார்.

அந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த போதே, சோற்றில் விஷம் கலந்து அழுதபடியே சாப்பிட்டுள்ளார் அகேஷ். இதனை அந்தப்பெண் அலட்சியப்படுத்தியதோடு, கிண்டலடித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அகேஷ், விரக்தியின் உச்சிக்கே சென்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. பலமுறை அப்பெண்ணிடம் பேசியும் பலனில்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட அகேஷ் கிளைமேக்ஸில் வைத்ததுதான் மெகா டுவிஸ்ட்டு. தனது சாவுக்கு அந்தப்பெண் காரணமில்லை என்றும் தனது உயிரிழப்பிற்கு அந்தப்பெண்ணை காதலித்து வந்த தனது துரோக நண்பர் சரண் தான் காரணம் எனக்கூறி உயிரிழந்ததால் போலீசார் சரணை பிடித்து விசாரித்து வருகின்றனர். அகேஷின் மற்ற நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுக்குறித்து தளி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments