நெல்லையில் 5,191கி.கி., தஞ்சாவூரில் 1,145கி.கி. கஞ்சா தீயிலிட்டு அழிப்பு
திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 ஆயிரத்து 191 கிலோ கஞ்சா போதை பொருள் நீதிமன்ற உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்டம், பொத்தையடி என்ற பகுதியில் உள்ள தனியார் கிடங்கில் மண்டல காவல்துறை டி.ஐ.ஜி. மூர்த்தி தலைமையில் அழிக்கப்பட்டன.
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட ஆயிரத்து 145 கிலோ எடையுள்ள கஞ்சா போதைப் பொருள் தஞ்சாவூர் மாவட்டம், அயோத்திப்பட்டியில் உள்ள மருத்துவக் கழிவுகள் மேலாண்மை சுத்திகரிப்பு நிலையத்தில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் தலைமையில் அழிக்கப்பட்டன.
Comments