நார்வே நாட்டில் நடத்தப்பட்ட கிளிப் டைவிங் போட்டியில் சாகசம்

0 1087

நார்வே நாட்டில் நடத்தப்பட்ட செங்குத்தான உயரத்தில் இருந்து குதிக்கும் கிளிப் டைவிங் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினர். ஆடவர் பிரிவில் அமெரிக்க வீரர் ஜேம்ஸ் லிச்டென்ஸ்டீன்  தண்ணீரில் குதித்தபோது உடலை பல முறை சுழற்றி கூடுதல் புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

கிளிப் டைவிங்கில் ஈடுபட்ட பிரிட்டிஷ் வீரர் எய்டன் ஹெஸ்லாப் இரண்டாவது இடமும் , ருமேனியா வீரர் கான்ஸ்டன்டின் போபோவிசி  மூன்றாவது இடமும் பிடித்தனர்.

மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ரியானான் இஃப்லாண்ட் உடலை பம்பரம் போன்று சுழன்றபடி தண்ணீரில் குதித்து கூடுதல் புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். கனடா நாட்டை சேர்ந்த மோலி கார்ல்சன் இரண்டாவது இடமும், இத்தாலியை சேர்ந்த எலிசா கோசெட்டி ((Elisa Cosetti )) மூன்றாவது இடமும் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments