லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு உதவிடும் வகையில் செயலி

0 321

லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில்  E-VAHAN SEVAI MOBILE APP என்ற செயலி அறிமுக விழா தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்றது.

ஓட்டுநருக்கான விபத்துக் காப்பீடு, வாகனத்துக்கான விபத்துக் காப்பீடு, வாகனம் பழுதாகி நின்றால் சரி செய்ய மெக்கானிகை அழைக்க, வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ஓட்டுநர்களுக்கு சுமார் 33 மொழிகளில் உதவிகள் செய்ய என பல்வேறு அம்சங்களை இந்த செயலி கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

செயலி அறிமுக விழாவில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள்  பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாலிமர் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியர் வேல்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments