சித்தராமையா முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் வரை போராட்டம் - எடியூரப்பா உறுதி

0 436

கர்நாடகாவில் ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் வரை போராட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு நகர மேம்பாட்டு கழகம், அதற்கு மாற்றாக 14 வீட்டு மனைகளை அவருக்கு வழங்கியது.

கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, ஒதுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகம் என்று கூறி பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் பெங்களூரில் இருந்து மைசூரு நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments