மதுபோதையில் கார் ஓட்டிவந்தவரிடம் ரூ.7,000 லஞ்சம் பெற்ற 2 போலீசார் பணியிடை நீக்கம்

0 411

திருப்பூர், திருமுருகன்பூண்டி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ மருதப்பபாண்டியன் மற்றும் ஆயுதப்படை காவலர் குணசுதன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள், காரை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்ததாகவும், அவரிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு, விலை உயர்ந்த ஆப்பிள் இயர்பட்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

புகாரின் பேரில், இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments