கோயம்புத்தூர் - அபுதாபி இடையே இண்டிகோவின் நேரடி விமான சேவை

0 283

கோவை - அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று காலை தொடங்கியது.

பயணிகள் மற்றும் தொழில் அமைப்புகள் தரப்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்ததன் பலனாக சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.40 மணிக்கு அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில் 163 பயணிகள் வந்தனர். மீண்டும் காலை 7:30 மணிக்கு கோவையில் இருந்து 168 பயணிகளுடன் விமானம் அபுதாபி புறப்பட்டுச் சென்றது.

வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் கோவை - அபுதாபிக்கு இடையே விமான சேவை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments