பாரிஸ் ஒலிம்பிக் குத்துச் சண்டையில் அல்ஜீரிய வீராங்கனைக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வென்றார்.
66 கிலோ எடை பிரிவுக்கான இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான சீன வீராங்கனை யாங் லியூ-வை எதிர்கொண்டு அவர் வெற்றி பெற்றார்
தங்கள் நாட்டு வீராங்கனை இமானே கெலிஃப் தங்கம் வென்றதை அல்ஜீரியா மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவை சேர்ந்த பெண்கள், சாலையில் திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Comments