சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. கரும்புகை வெளியானதை கண்டு வெளியேறி தப்பிய ஓட்டுநர்..!
சென்னை நந்தனம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
ஃபோர்டு ஃபியஸ்டா கால் டாக்சி காரின் முன்பகுதியிலிருந்து கரும்புகை வெளியானதும் ஓட்டுநர் உடனடியாக வெளியேறிய நிலையில், தீப்பற்றிய கார் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
மளமளவென பரவிய தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தியபோதும், கார் முழுவதும் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறிய போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறனர்.
Comments