சென்னை மெட்ரோ திட்டத்தில் 28 புதிய மெட்ரோ ரயில்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்

0 362

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பயணிகளின் வசதிக்காக சுமார் 2 ஆயிரத்து 820 கோடி ரூபாய் செலவில் தலா 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தவும், 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய அனுப்பிய கருத்துருவுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும், மத்திய நிதி ஆயோக் இந்த ஆண்டு ஜூன் மாதமும் ஒப்புதல் அளித்ததாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments