பிரேசிலில் விமானம் விழுந்து நொறுங்கி 61 பயணிகள் உயிரிழப்பு

0 415

பிரேசிலில் 61 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர்.

சாவோ பாலோ புறநகர்ப் பகுதியில் விமானம் விழுந்ததில் ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்தன. காஸ்காவேல் எனுமிடத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. விமானம் விழுந்து நொறுங்கியதால் அதில் இருந்த 57 பயணிகளும், விமான ஊழியர்கள் 4 பேரும் உயிரிழந்தனர்.

விமானம் வானத்தில் இருந்து குட்டிக்கரணம் அடித்து கீழே விழுந்து நொறுங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments