விஷச்சாராயத்தால் பெற்றோரை இழந்த 3 பிள்ளைகளுக்கு நீதிபதிகள் உதவி

0 343

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச் சாராயத்தால் தாய் தந்தையை இழந்த பிள்ளைகளை சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் சௌந்தர் அவர்களுக்கு புத்தாடை, சைக்கிள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

விஷச் சாராயம் குடித்து சுரேஷ் என்பவரும் அவரது மனைவியும் உயிரிழந்த நிலையில், அவர்களது பிள்ளைகளான கோகிலா, ஹரிஷ், ராகவன் ஆகியோர் நிற்கதியாகினர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை ஆய்வு செய்ய வந்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் சௌந்தர் ஆகியோர் தாய், தந்தையை இழந்த பிள்ளைகளை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வரவழைக்கப்பட்ட அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நீதிபதிகள், பரிசு பொருட்களை வழங்கி அவர்கள் சிறப்பாக கல்வி கற்க அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments