மீன் சந்தையில் கெட்டுப்போன நண்டுகள் விற்பனை.. பணத்தை திருப்பிக் கொடுத்து தவறு நடந்துவிட்டதாக சமாளித்த வியாபாரி
சென்னை அருகே வானகரம் மீன் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள நண்டுகள் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாக வியாபாரியிடம் வாடிக்கையாளர் ஒருவர் முறையிட்டார்.
கிலோ 180 ரூபாய்க்கு வாங்கிய நண்டுகளை வீட்டுக்கு கொண்டு சென்று பிரித்தபோது துர்நாற்றம் வீசியதால் மீன் மார்க்கெட் திரும்பிய அவர், வியாபாரியிடம் வாதிட்டார்.
உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகாரளிப்பேன் என்று வாடிக்கையாளர் கூறியதை அடுத்து, பணத்தை திருப்பிக் கொடுத்த வியாபாரி, தெரியாமல் தவறு நடந்துவிட்டதாக தெரிவித்தார்.
Comments