திருமங்கலம் அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி

0 643

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற கார், எதிரே வந்த அரசுப் பேருந்து மீது அதிவேகமாக மோதி அப்பளம் போல் நொறுங்கியதில் 2 வயது குழந்தை உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

காடனேரி கிராமத்தை சேர்ந்த சென்ராயபெருமாள் உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்கள் சௌந்தரராஜன் உள்ளிட்டோருடன் ஊருக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

ஓட்டுநர் உட்பட 8 பேர் பயணம் செய்த கார் டி.புதுப்பட்டி பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது டி.கல்லுப்பட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது மோதியுள்ளது.

இதில், சென்ராயபெருமாளின் 2 வயது குழந்தை ஷிவானிகா, சௌந்தரராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், எஞ்சிய 6 பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments