பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வென்றவர்கள்
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில், போட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்த டெபோகோ 19.46 விநாடிகளில் கடந்து தனது நாட்டுக்கான முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றார்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த சிட்னி மெக்லாக்லின், 50.37 விநாடிகளில் ஓடி உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில், அமெரிக்காவின் கிராண்ட் ஹாலோவே 12.99 விநாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் நெதர்லாந்து அணி மூன்று ஒன்று என்ற கோல் கணக்கில் ஜெர்மனியைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது.
இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியைத் தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றது.
பெண்கள் மல்யுத்தத்தில், 53 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் ஜப்பானில் அகாரி ஃபியூஜிநாமி தங்கம் வென்றார்
ஆண்கள் பளுதூக்கும் போட்டியில் 73 கிலோ எடைப் பிரிவில் இந்தோனேசியாவின் ரிஸ்கி மொத்தம் 354 கிலோ எடை தூக்கி, ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார்.
பெண்களுக்கான டேக்வாண்டோ ஃபெதர்வெயிட் பிரிவில் தென் கொரியாவின் கிம் யு-ஜின் தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் உலுக்பெக் ரஷிடோவ் தங்கப் பதக்கம் வென்றார்.
Comments