நண்பனுக்காக.. இது 4 வது கொலை அக்னிபிரதர்ஸின் கொடூர சம்பவம் இன்ஸ்டா பதிவு போட்டு பழிக்குப்பழி..! போலீசாருக்கு சவால் விடும் ரவுடிகள்

0 1193

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே  நண்பன் கொலைக்கு பழிக்கு பழியாக 4 வதாக ரவுடி ஒருவரை தலையை சிதைத்து கொலை செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அக்னி பிரதரஸ் என்கிற பெயரில் குழுவாக இயங்கிவரும் கொலைகார கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வியாழக்கிழமை காலை வினோத் கண்ணன் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி தலையை முழுவதுமாக சிதைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இக்கொலை தொடர்பாக போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான அக்னி ராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு மைனர் மணி என்பவரின் கொலை வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
ஜாமினில் வெளியே வந்த அக்னிராஜை மார்ச் 5ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு மைனர் மணியின் ஆதரவாளர்கள் வெட்டி கொன்றனர்.

இதற்கு பழிவாங்க வேண்டும் என்று சபதம் எடுத்த அக்னி ராஜனின் நண்பர்கள், அக்னி பிரதர்ஸ் என்று ஒரு குழுவை துவக்கி அக்னி ராஜ் வழக்கில் தொடர்புடைய பரமசிவம்,ஆகாஷ், அழகுபாண்டி, ஆகியோரை அடுத்தடுத்து தலையை சிதைத்து வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக 4 வதாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வினோத் கண்ணன் என்பவரை வியாழக்கிழமை காலை பல்லடம் அருகே கரையான்புதூர் என்ற இடத்தில் காரில் துரத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் தலையை வெட்டி சிதைத்து கொன்று விட்டு தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்

பழிக்குப்பழியாக கொல்லப்பட்ட 4 பேர் போக, அக்னி ராஜ் கொலை வழக்கில் கைதான பூச்சி இருளப்பன், விக்கி, சக்திவேல், தர்மராஜ் ஆகிய நான்கு பேரும் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக இருக்கு ம் நிலையில் அவர்களையும் அக்னி பிரதர்ஸ் குறி வைத்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக பதிவிட்டுள்ளனர்.

கதைக்கு முடிவு சொல்லலாம்... பகைக்கு...?என்று பதிவிட்டு அக்னியின் வேட்டை அட்டகாசமாக நடக்க உள்ளது சிந்திய ரத்தம் வீண் போகாது எனக்குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பதில் தரமாக இருந்ததா ? எனவும், கொலை தொடரும் என வினோத் கண்ணன் வெட்டப்பட்ட புகைப்படத்தை, அக்னி ராஜின் புகைப்படத்தோடு இணைத்து ஸ்டோரியாக வெளியிட்டுள்ளனர்...

போலீசாருக்கு சவால் விடும் வகையில் அடுத்தடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் அக்னிபிரதர்ஸ் என்ற கும்பலை பல்லடம் காவல்துறையினர் மூன்று தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments