பயாலாஜி தெரியாது.. பாட்டனி தெரியாது... குடியும்..கும்மாளமும் தெரியுமாம்..! ஓடும் பேருந்தில் கத்தியுடன் சிக்கிய மாணவர்கள்

0 787

சென்னையில் மாநகரப் பேருந்தில் ஆபாச பாடல்களை  பாடி ரளையில் ஈடுபட்டதுடன், பையில் கத்தி வைத்திருந்ததாக கல்லூரி மாணவர்கள் 10 பேரை போலீசார் பிடித்து  சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தாங்கள் படிக்கும் பி.எஸ்.சிக்கும், பயாலஜிக்கும், பாட்டனிக்கும் விளக்கம் தெரியாமல் திரு.. திருவென விழிக்கும் இவர்கள் தான் கத்தியுடன் சிக்கிய கல்லூரி மாணவர்கள்..!

சென்னை பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லக்கூடிய தடம் 101 மாநகரப் பேருந்தை ஒட்டுனர் பிரபாகரன் என்பவர் ஒட்டி வந்த நிலையில், சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் ஏறிய தனியார் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஆபாச கானா பாடல்களை பாடிக்கொண்டு கலாட்டா செய்து வந்துள்ளனர்.

இதனால் பேருந்தில் பயணித்த பெண் பயணிகள் முகம் சுழித்தனர் . இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பிரபாகரன் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பேருந்து திருவொற்றியூர் பணிமனை வந்த போது பேருந்து ஒட்டுனர் கல்லூரி மாணவர்களை பார்த்து இது போல ஆபாச பாடல்கள் பாடலாமா உங்கள் வீட்டிலும் அக்கா தங்கைகள் இருக்கிறார்கள் என கூற அவர்கள் ஓட்டுனரை மிரட்டி உள்ளனர்

அப்போது அங்கு வந்த போலீசார் பேருந்தின் இரு பக்க கதவுகளையும் மூடி விட்டு சோதனை செய்த போது அவர்களின் பேக்கில் இரு கத்திகளும், குளிர் பானத்தில் மது கலந்து குடித்து இருப்பதும் தெரியவந்தது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, ஜெயின் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்று மீஞ்சூர், எண்ணூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது கல்லூரியை கட் அடித்து விட்டு மெரினா கடற்கரைக்கு சென்று வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த 10 மாணவர்களையும் போலீசார் ரோந்து வாகனத்தில் ஏற்றி கொண்டு காவல் நிலையத்தில் அழைத்து சென்றனர்

கத்தியை கல்லூரிக்கு கொண்டு சென்ரது யார் என்று போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments