பெரம்பலூர் மாவட்டம் இ-பைக் பழுதான வழக்கில் வாடிக்கையாளர் புகாரில் ஓலா நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம்: நுகர்வோர் நீதி மன்றம் தீர்ப்பு
ஓலா நிறுவனத்தின் இ-பைக்கில் 4.0 வெர்சன்சாப்ட்வேரை அப்டேட் செய்தபோது ஏற்பட்ட பழுது குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், 45 நாட்களாக வாடிக்கையாளரை அழைக்கழித்ததாக, அந்நிறுவனத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜன் குருராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், உரிய நேரத்தில் சேவை வழங்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவு பத்தாயிரம் ரூபாயையும் தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்கா விட்டால் 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
Comments