காலையில் திருமணம்.. மாலையில் கத்திக்குத்து .. பொண்ணும் மாப்பிள்ளையும் விபரீதம்..! காரணத்த கேட்டா தலையேசுற்றுது

0 1200

ஒரு வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி ஒன்று, மாலையில் தனி அறையில் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் கே.ஜி.எப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடகாவின் கோலார் மாவட்டம், செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான நவீன்குமார் . சொந்தமாக துணிக்கடை நடத்தி வந்த இவர், கடந்த ஒருவருடமாக தான் காதலித்து வந்த கல்லூரி மாணவி லிகிதா ஸ்ரீ என்பவரை சம்பவத்தன்று காலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

மாலையில் புதுமணத்தம்பதிகள் ரெப்ரஷ் செய்து கொள்வதற்காக, உறவினரான முனியப்பபா என்பவரது வீட்டில் இருந்த அறையில் தனியாக தங்கினர். அப்போது தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பயங்கர தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, புதுமணதம்பதியர் ஒருவரை ஒருவர் கத்தியால் பயங்கரமாக தாக்கி கொண்டதாகவும், இதில் 2 பேரும் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த நிலையில் கதவை உடைத்து உறவினர்கள் இருவரையும் மீட்டதாகவும் தெரிவித்தனர்

பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் லிகிதா ஸ்ரீ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். நவீன் குமாரை மீட்டு ஜாலப்பா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன்குமாரும் உயிரிழந்தார்.

விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்த நிலையில் மணமகள் செல்போனில் யாருடனோ பேசியதாகவும் , அதன் தொடர்ச்சியாகவே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசிக் கொண்டு கத்தியால் தாக்கி கொண்டதாகவும் மற்றொரு உறவினர் தெரிவித்தார். ஆளுக்கொரு காரணம் கூறியதால் எது தான் உண்மையான காரணம் என்பது தெரியாமல் குழம்பிப்போன போலீசார், இருவரது செல்போன்களையும் கைப்பற்றி அதில் பேசியவர்கள், சாட்டிங் செய்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments