மீனம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லிக்கு புதிய வழித்தடம் - மெட்ரோ

0 439

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்தை பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்தில் சென்றடையும் வகையில் புதிய வழித்தடம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக மீனம்பாக்கத்தில் இருந்து குரோம்பேட்டை, திருநீர்மலை, குன்றத்தூர் வழியாக பூந்தமல்லிக்கு 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கும் பணியை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, பூந்தமல்லி முதல் பரந்தூர் விமான நிலையம் வரை 43.63 கிலோமீட்டர் நீளத்திற்கு வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments