21 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இருந்து அமெரிக்கா வந்த 2 பாண்டாக்கள்
அமெரிக்காவில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு பாண்டா கரடிகள் முதல்முறையாக பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
யான் சான், ஷின் பாவ் என்ற இரண்டு பாண்டாக்கள், அமெரிக்காவின் சான் டியகோ வனவிலங்கு பூங்காவிற்கு கடந்த ஜூனில் கொண்டு வரப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தன. இடமாற்றத்தை பாண்டாக்கள் பழகுவதற்கு சீன வனவிலங்கு நிபுணர்களுடன் பணியாற்றி வருவதாக சான் டியகோ வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments