வந்தா வேண்டான்னா சொல்றோம்.. யாரும் வரமாட்றாங்க தலைவரே... காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கதறல்..

0 1444

சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டிருக்க அவர்கள் முன்னிலையே கட்சியின்நிலை குறித்து நிர்வாகிகள் மாறி மாறி புலம்பினர்.

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, தங்கபாலு உள்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி நிர்வாகிகள் கட்சியில் உள்ள மொத்த குறைகளையும் கொட்டித் தீர்த்தனர். மேடையில் பேசிய வில்லிவாக்கம் பகுதி நிர்வாகி ஒருவர், பூத்துக்கு 10 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்கிறார்கள், வந்தால் சேர்க்க மாட்டோம் என்றா சொல்கிறோம் எனப்போட்டுடைத்தார்..

தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலின தலைவர் ரஞ்சன் குமார், கட்சியினர் உழைப்பில் பதவி வாங்குபவர்கள் காரியம் முடிந்த பின்னர் திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்றார்..

புலம்பிய நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் விதமாக பேசிய செல்வப் பெருந்தகை, பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று இல்லை, நமக்குள் இருக்கும் பிரச்சினையை நாம்தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தலைவர் செல்வப்பெருந்தகை வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டால் தான் தமிழகத்தில் காங்கிரஸ் காலூன்ற முடியும் என்று நிர்வாகிகள் அக்கூட்டத்தில் வெளிப்படையாகவே பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments