மெரினா காமராஜர் சாலையில் விபத்து... நடுரோட்டில் அமர்ந்திருந்தவர் கார் மோதி பலி

0 547

சென்னை, மெரினா பகுதியில் ராணி மேரி கல்லூரி அருகே சாலையின் நடுவே அமர்ந்திருந்த ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்தார்.

கால் டாக்ஸி டிரைவரான வீரமணி என்பவர் இன்று அதிகாலை முட்டுக்காட்டில் இருந்து 4 பயணிகளை ஏற்றிக் கொண்டு திருவொற்றியூர் நோக்கி வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

நடுரோட்டில் ஒருவர் அமர்ந்து இருப்பதை வீரமணி கவனிக்காத நிலையில், கார் மோதியதில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வீரமணியை கைது செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார், விபத்தில் இறந்தவர் யார்,எதனால் அவர் நடுரோட்டில் அமர்ந்திருந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments