2008-க்குப் பிறகு ஆண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம்

0 937

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில், 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த குயின்சி ஹால் 43.40 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான போல்வால்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் நினா கென்னடி 4.90 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில், மொராக்கோ நாட்டின் எல் பக்காலி தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 8 நிமிடங்கள் 6.05 விநாடிகளில் கடந்தார். எத்தியோப்பியாவைச் சேர்ந்த உலக சாதனையாளர் கிர்மா, கடைசிச் சுற்றில் தவறி விழுந்து அடிபட்டதில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், ஜமைக்காவின் ரோ ஸ்டோனா 70 மீட்டர் தூரம் வீசி, இப்போட்டியில் தனது நாட்டுக்கான முதல் தங்கத்தை வென்றார்.

பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில், அமெரிக்காவின் சாரா தங்கம் வென்றார். இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவிருந்த இந்தியாவின் வினேஷ் போகத், கூடுதல் உடை எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான மல்யுத்தத்தில், 77 கிலோ எடைப் பிரிவில், ஜப்பானின் குசாகாவும், 97 கிலோ எடைப் பிரிவில் ஈரானின் சராவியும் தங்கம் வென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments