மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

0 1053

மல்யுத்தப் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். போராடும் வலிமையை இழந்துவிட்டதாகவும் தமது நம்பிக்கை உடைந்து போய் விட்டதாகவும் சமூகவலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைக்கான மல்யுத்தப் போட்டியில் உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

அமெரிக்க வீராங்கனை ஆன் ஹில்டபிராண்ட்டுக்கு எதிராக தங்கப்பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள தமக்கு வெள்ளிப்பதக்கம் வழங்குமாறு அவர் கோரியுள்ளார். அவரின் கோரிக்கை மீது இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments