தமிழக சாலை திட்டங்களுக்கு 2000 கோடி அல்ல, 5000 கோடி கூட ஒதுக்கத் தயார்.. தி.மு.க. எம்.பி. கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
தமிழகத்தின் சாலைத் திட்டங்களுக்கு இந்த ஆண்டு போதிய நிதி வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. எம்.பி. கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், 2023 - 24 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 657.53 கோடி ரூபாய் போதுமானதாக இல்லை என்றும் தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக சுமார் 2000 கோடி ரூபாயை நடப்பு நிதி ஆண்டில் காலதாமதமின்றி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு விளக்கமளித்த நிதின் கட்கரி, தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி வழங்குவதில் தாங்கள் எந்தவித வரையறையும் வைத்திருக்கவில்லை என்றும் 2000 கோடி அல்ல, 5000 கோடியை கூட ஒதுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Comments