இந்தியாவில் இருந்து அடுத்து எங்கு செல்கிறார் ஷேக் ஹசீனா..?

0 633

இந்தியாவில் இருந்து அடுத்து எங்கு செல்வது என்பது குறித்து தமது தாயார் ஷேக் ஹசீனா இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமெரிக்காவில் வசித்து வரும் அவரது மூத்த மகன் சஜீப் வசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.

ஹசீனா டெல்லியிலேயே சிறிது காலம் தங்கப் போவதாகவும் ஜெர்மானிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தற்போது டெல்லியில் ஹசீனா தங்கி உள்ள ரகசிய வீட்டுக்கு இந்திய விமானப் படையின் கருடா பிரிவு, உச்சகட்ட பாதுகாப்பு அளித்து வருவதாக கூறப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநராக பதவி வகிக்கும் ஹசீனாவின்  மகள் சைமா வாஸத் டெல்லியில் தாயுடன் தங்கியிருப்பதாகவும் தெரிகிறது.

இதனிடையே, ஹசீனாவின் தங்கை ரெகனாவின் மகள் துலிப் சித்திக், பிரிட்டனில் தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாக உள்ளார். அவர் மூலமாக பிரிட்டனில் ஹசீனா தஞ்சமடைய ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments