கோக்கல் பகுதியில் நடைபாதை, வீடுகளில் திடீர் விரிசல்... இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
கடந்த ஒரு மாதமாக மழை பெய்துவரும் நிலையில், திடீரென சில வீடுகளிலும், நடைபாதையிலும் விரிசல் விட்டதாக புகார் எழுந்ததால், நீலகிரி மாவட்டம் கோக்கல் பகுதியில் இந்திய புவியியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு வசித்துவந்த 50 பேர் முன்கூட்டியே முகாம்களில் தங்கவைக்கப்பட்டிக்கும் நிலையில், சில வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. கோக்கல் பகுதி நிலச்சரிவு ஏற்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அங்கு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments