பிரிட்டன் பிரதமருக்கு எலான் மஸ்க் அடுக்கடுக்கான கேள்வி
பிரிட்டனில் வன்முறை ஏற்பட சமூகவலைத்தளங்களே காரணம் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறிய நிலையில், எக்ஸ் வலைத்தள உரிமையாளர் எலான் மஸ்க் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டுப்போர் தவிர்க்க முடியாதது எனப் பதிவிட்ட எலான் மஸ்க், ஃபேஸ்புக் பதிவிற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது, இது பிரிட்டனா, சோவியத் யூனியனா என கேள்வி எழுப்புவதாக கூறியுள்ளார்.
ஏன் அனைத்து சமூகங்களுக்கும் பிரிட்டனில் பாதுகாப்பு இல்லை என கேட்டுள்ள மஸ்க், போலீசார் பாரபட்சமாக நடப்பதாக மறைமுகமாக சாடினார்.
Comments