சென்னை கட்டிட அனுமதி கட்டணம் உயர்த்தப்பட்ட புகாருக்கு மாநகராட்சி எதிர்ப்பு

0 358

 சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டதாக எதிர் கட்சிகள் தெரிவித்திருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சுயசான்றிதழ் அடிப்படையில் இணையவழி மூலம் விண்ணப்பித்த உடன் கூர்ந்தாய்வு கட்டணம், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு கட்டணம் இன்றி 2500 சதுரஅடி பரப்பளவு வரை உள்ள மனையில் 3500 சதுரஅடிக்கு கட்டடிடம் கட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு சதுர அடிக்கு 99 ரூபாய் 70 பைசாவாக வசூலிக்கப்பட்ட கட்டணம் 30 பைசா மட்டுமே உயர்த்தி100 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments