வாட்ஸப் பயன்படுத்த மாட்டேன் - வெனிசுலா அதிபர் நிகோலஸ் மடுரோ
வெனிசுலா அரசுக்கு, வாட்ஸப் நிறுவனம் ஒத்துழைக்காததால் இனி தாம் வாட்ஸப் பயன்படுத்தப்போவதில்லை என அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மடுரோ தெரிவித்துள்ளார். அண்மையில் அங்கு நடந்த அதிபர் தேர்தலில் மடுரோ வெற்றி பெற்றதாக அறிவித்த தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணிக்கை விகிதங்களை வெளியிட மறுப்பதால், முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன.
கலவரங்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் காவல் அதிகாரிகளின் புகைப்படங்கள் வாட்ஸப் குழுக்கள் மூலம் பகிரப்பட்டு, போலீசாரின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக மடுரோ குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபோன்ற தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க வாட்ஸப் தவறியதால், வாட்ஸபுக்கு பதிலாக டெலிகிராம், வீ-சேட் போன்ற செயலிகளை பயன்படுத்துமாறு ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments