2000 ஜன.1க்கு முன்பு பிறந்த குழந்தைகளின் பெயர், இருப்பிடத்தை பதிவு செய்ய டிச.31 வரை கால அவகாசம்: சுகாதாரத்துறை இயக்குநர்
பிறப்பு, இறப்பு சட்டப்படி 2000ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையின்படி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 19 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இனி நீட்டிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகளின் பெயர் பிறப்புச் சான்றிதழ்களில் இல்லை என்றால் ஒரு வருடத்திற்குள் அதனை பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments