பாதாள சாக்கடைக் குழாய் சீரமைப்புப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளம்... திடீர் மண் சரிவு ஏற்பட்டு, குழாய் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் பலி

0 413

தஞ்சை விளார் சாலையில் பாதாள சாக்கடைக் குழாய் சீரமைப்புக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் மண்சரிவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

பாதாள சாக்கடைக் குழாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தேவேந்திரன், நாராயணமூர்த்தி ஆகியோர் நேற்று மாலை 6.15 மணியளவில் பணிமுடிந்து பள்ளத்தை விட்டு வெளியேற முயன்றபோது மண்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் சுமார் 20 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் இருவரில் தேவேந்திரனை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். 2 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அருகிலேயே பெரிய பள்ளம் தோண்டி, சுமார் 3 மணி நேரம் போராடியும் நாராயண மூர்த்தியின் சடலம் மட்டுமே கிடைத்தது. 

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் தொழிலாளர்களை வேலை வாங்கிய ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments