கமுதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாகக் கைது

0 306

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.

ஏ.நெடுங்குளத்தைச் சேர்ந்த செந்தில்வேல் என்பவர், தனது தந்தை பெயரில் பொதுப்பணித்துறை மூன்றாம் நிலை ஒப்பந்ததாரராகப் பதிவு செய்து, அதற்கான தொகையையும்  கட்டியுள்ளார்.

ஒப்பந்ததாரருக்கான சான்றிதழை வழங்காமல் அலைக்கழித்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், லஞ்சமாக 12 ஆயிரம் ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுகளை ராமச்சந்திரன்கையில் கொடுக்க வைத்து, போலீசார் அவரை மடக்கியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments