முன்விரோதத்தால் வீட்டிற்கு செல்லும் பாதையை பூட்டிய பக்கத்து வீட்டுக்காரர்... பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் குழந்தைகள்
குளச்சல் அருகே, தனது வீட்டிற்கு செல்லும் பாதையை பக்கத்து வீட்டுக்காரர் இரவோடு இரவாக அடைத்துவிட்டதால் குடும்பத்துடன் வீட்டில் முடங்கி கிடப்பதாக அரசு பேருந்து நடத்துனரான லாரன்ஸ் புகாரளித்துள்ளார்.
பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஸ்மைலின், குடிபோதையில் தன்னை தாக்கியதாக லாரன்ஸ் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்மைலின், நிபந்தனை ஜாமீனில் வந்து, தனது வீட்டை ஒட்டி லாரன்ஸ் வீட்டிற்கு செல்லும் பாதையை நள்ளிரவில் பூட்டு போட்டு அடைத்துவிட்டு, தனது குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
வழி உரிமை சட்டத்தின் கீழ் அந்த பாதையை பயன்படுத்தும் உரிமையை நீதிமன்றத்தின் வாயிலாக தான் பெற்றுவிட்டதாக கூறும் லாரன்ஸ், தற்போது தன்னால் பணிக்கு செல்ல முடியவில்லை எனவும், தனது குழந்தைகளால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை எனவும் புகாரளித்துள்ளார்.
இது குறித்து விளக்கம் கேட்க ஸ்மைலினை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
Comments