வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக்கோரி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பலி 98ஆக அதிகரிப்பு

0 404

வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98ஆக உயர்ந்த நிலையில், தலைநகர் டாக்காவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இடஒதுக்கீட்டில் பாரபட்சம் நடப்பதாக எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஜூலை 19ஆம் தேதி ஒரேநாளில் 67 பேர் உயிரிழந்தனர்.

பிரதமர் பதவி விலகக்கோரி டாக்காவில் ஞாயிறன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில், ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 13 போலீசார் உட்பட 98 பேர் பலியாகினர். இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த டாக்கா முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments