காரைக்கால் மாவட்டத்தில் மகனின் 2-வது திருமணத்திற்கு பெண் பார்ப்பதாகக் கூறி ரூ.2.18 லட்சம் பறித்த தம்பதியும் கைது

0 416

விவாகரத்து பெற்ற நபருக்கு இரண்டாம் திருமணம் நடப்பதற்கு தோஷத்தை நீக்குவதாக கூறி மோசடி செய்த போலி ஜோதிடர் மற்றும் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டம், நல்லாத்துரையை சேர்ந்த சகுந்தலா என்பவரது மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய தோஷங்களை நீக்குவதாக கூறி, அவரிடம் ஜோதிடர் முனியசாமி 37 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பித்தளை பூஜை பொருட்கள், சாமி சிலைகள் வாங்கியதாக கூறப்படுகிறது.

முனியசாமி அறிமுகம் செய்துவைத்த சுகந்தி, வினோத் தம்பதியினர், மகனின் 2வது திருமணத்திற்கு பெண் பார்ப்பதாகக்கூறி, சகுந்தலாவிடமிருந்து 2 லட்ச ரூபாய் வரை பறித்ததாக கொடுத்த புகாரில் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments