சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து... 5 வயது சிறுவன் பலி - ஆட்டோர் ஓட்டுநர் & காவலர் காயம்

0 440

சென்னை மெரினா காமராஜர் சாலையில், முதல்வரின் கான்வாய் செல்லும் பாதையில் சென்ற ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 5 வயது சிறுவன் உயிரிழந்தான்.

ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தார். மெரினா மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேகர், தனது 5 வயது பேரன் அலோக்நாத் தக்சீன் மற்றும் குடும்பத்தினரை நேற்று மாலை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, மெரினா காமராஜர் சாலையில், முதல்வரின் கான்வாய் சென்றபிறகு, அடுத்த சில நிமிடங்களில், சேகர் ஆட்டோவில் அந்த பகுதியை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மகேந்திரேன் என்பவர், திடீரென ஆட்டோவை தடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் சடன் பிரேக் பிடித்து நிறுத்த முயன்ற ஆட்டோ, காவலர் மீது மோதி கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில், ஆட்டோ ஓட்டுநர் சேகர், 5 வயது சிறுவன், காவலர் மகேந்திரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த சிறுவன், கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பின்னர், குழந்தையின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, உடற்கூராய்வுக்குப் பின், குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments