அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக அ.ம.மு.க நிர்வாகி கைது

0 440
அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக அ.ம.மு.க நிர்வாகி கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அ.ம.மு.க நிர்வாகி பரிமளம், அவரது உறவினர் நாராயணன் ஆகியோரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி போலீசார் கைது செய்தபோது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருக்காகுறிச்சியில் அரசு புறம்போக்கு இடத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக நேற்று அளவீடு செய்ய முற்பட்டபோது, தங்களுக்கு சொந்தமான இடத்தில் அளவீடு செய்வதாக கூறி வருவாய் ஆய்வாளரை இருவரும் தடுத்தாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரின்போரில் வடகாடு போலீசார் அவர்களை கைது செய்து மருத்துவமனை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது நாராயணன் மயங்கி விழுந்தார். அப்போது போலீசாரை கண்டித்து ஆலங்குடி டி.எஸ்.பி வாகனத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, நாராயணனை சொந்த ஜாமனில் விடுவித்த நீதிபதி, கரம்பக்குடி ஒன்றிய துணைத் தலைவர் பரிமளத்தை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments