இந்தியா தற்போது மிகை உணவு நாடாக இருக்கிறது - பிரதமர் மோடி
இந்தியா தற்போது மிகை உணவு நாடாக இருப்பதாகவும், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் உலக நாடுகளுக்குத் தீர்வு அளிப்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெறும் வேளாண் பொருளாதார நிபுணர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட அவர், பால், பருப்பு வகைகள், மசாலா பொருள்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். உணவு தானிய உற்பத்தி, சர்க்கரை, தேயிலை, பருத்தி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் 15 விவசாய பருவ மண்டலங்களும், வெவ்வேறு விவசாய நடைமுறைகளும் உள்ளதாகவும், இந்தப் பன்முகத்தன்மைதான் உலகின் உணவுப் பாதுகாப்புக்கான நம்பிக்கையின் ஆதாரமாக விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஒரு பருவநிலையையும் தாங்கக்கூடிய வகையில் ஆயிரத்து 900 வகையான பயிர் வகைகளை உருவாக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments