"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மெட்ரோ திட்டத்திற்கு கோயில்கள் இடிப்பா?.. - உயர்நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு
மெட்ரோ ரயில் திட்டம் கட்டுமானத்திற்காக சென்னை ராயப்பேட்டை ஒயிட் சாலையிலுள்ள ரத்தின விநாயகர், துர்க்கை அம்மன் கோயில்களை அகற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேரில் பார்வையிட்டு கோயில்களை இடிப்பதா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ரவி, வி.ராகவாச்சாரி ஆகியோரும் பங்கேற்றனர். நீதிபதி குமரேஷ் பாபு கோவிலுக்குள் சென்று ஆய்வு செய்தபோது பக்தர்களை உள்ளே விடாமல் தடுத்த போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Comments