ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆடி18 விழா
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரை படித்துறையில் புதுமணத்தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில்விட்டு, புதுத் தாலிக்கயிறை மாற்றிக் கொண்டனர்.
திருவையாறு காவிரி கரை படித்துறையில் திரண்ட பெண்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் ஆடிப் பெருக்கையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் பழங்கள், மஞ்சள் கயிறு மற்றும் புதுமண தம்பதிகள் திருமண நாளில் அணிந்து இருந்த மாலை, தாலி ஆகியவற்றை வைத்து பூஜை செய்து சூரிய பகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆடி18 விழா
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் திரளானோர் குவிந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பவானியில் நீராட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் படித்துறையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Comments