கோயம்புத்தூரில் விஷத்தன்மை அதிகமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பு கடித்து பாம்புபிடி வீரர் 5 நிமிடங்களிலே உயிரிழப்பு

0 846

கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் இருந்த விஷத்தன்மை அதிகமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பை பிடிக்க முயற்சித்த பாம்புபிடி வீரர் முரளிதரன் என்பவரை அந்த பாம்பு கடித்ததால் உயிரிழந்தார்.

சுமார் 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து பைக்குள் போட்டு எடுத்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக முரளிதரன் தடுக்கி விழுந்ததாகவும், கீழே விழுந்த பையிலிருந்து வெளியே வந்த பாம்பு அவரை கடித்ததாகவும் கூறப்படுகிறது.

பாம்பு கடிந்த 5 நிமிடங்களுக்குள் அவர் அங்கேயே உயிரிழந்த நிலையில, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments