பாரீஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் சர்ச்சை... 46,வினாடியில் போட்டியில் இருந்து விலகிய இத்தாலி வீராங்கனை

0 596

பாரீஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில், உடலில் அதிக ஆண் தன்மை கொண்டவர் என அறியப்பட்ட அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிப்பை எதிர்த்து மோதிய இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, நாற்பத்தி ஆறே வினாடிகளில் போட்டியிலிருந்து விலகியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இமானே கெலிப்பின் உடலில் ஆண் தன்மைக்கான டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகம் இருந்ததால், கடந்தாண்டு பாலின தகுதி சோதனையில் தோல்வி அடைந்து சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

விதிகளுக்கு உட்பட்டே அவர் பங்கேற்க அனுமதி அளித்ததாக ஒலிம்பிக் சங்கத்தினர் தெரிவித்திருந்த நிலையில், 66 கிலோ எடைப்பிரிவு போட்டியில், அவரை எதிர்த்து களமிறங்கிய இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, கெலிப்பின் குத்துகளை தாங்க முடியாமல் மூக்குடைந்த நிலையில்,  விலகுவதாக அறிவித்தார்.

கெலிப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது ஏஞ்சலா மேடையில் கதறி அழுதார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments