ரூ 40 க்கு பதில் ரூ 180க்கு பயணச்சீட்டு இடையில் உள்ள ஊரில் உள்ளவங்க மனுசங்களா கண்ணுக்கு தெரியலையா ? அரசு விரைவு பேருந்து நடத்துனர் அடாவடி

0 1095

அரசு விரைவு பேருந்தில் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கே 40 ரூபாய்தான் கட்டணம் என்ற நிலையில் இடையில் உள்ள ஸ்பிக் நகருக்கு 180 ரூபாய் கட்டணம் வசூலித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி அடுத்த ஸ்பிக் நகரை சேர்ந்த ரெயில்வே ஊழியரான மணிகண்டன் என்பவர், திருச்செந்தூரில் இருந்து தனது ஊருக்கு செல்ல தூத்துக்குடி வழியாக திருச்சி செல்லும் TN68N 1095 என்ற அரசு விரைவு பேருந்தில் ஏறி உள்ளார். இந்த பேருந்து இடையில் எங்கும் நிற்காது என்று அரசு பேருந்து நடத்துனர் தெரிவித்த நிலையில் , பேருந்தில் இடம் காலியாக இருந்ததால் மணிகணடன் அதில் ஏறி அமர்ந்ததாக கூறப்படுகின்றது.

தான் இறங்க வேண்டிய ஸ்பிக் நகருக்கு 40 ரூபாய் தான் பயணக்கட்டணம் என்ற நிலையில், அங்கு பேருந்தை நிறுத்த மறுத்த நடத்துனர், 180 ரூபாய் கொடுத்து மதுரைக்கு பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளச்செய்ததாகவும், அதன் பின்னரே அவரை ஸ்பிக் நகரில் இறக்கி விட்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த திருச்சி அரசு போக்குவரத்துகழக பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட நடத்துனரிடம் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். அதேபோல சாத்தான் குளம் அருகே உள்ள தேர்க்கண் குளம் கிராமத்து மக்கள் தங்கள் ஊருக்குள் வந்து செல்ல மறுத்த தனியார் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்

பேருந்து உரிமையாளர் சொல்லியும் கேட்காத ஓட்டுனருக்கு எதிராக கிராமத்து மக்கள் ஆவேசமானதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை ஊருக்குள் திருப்பி பயணிகளை ஏற்றிச்சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments