மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட உதயநிதி ஸ்டாலின்..
திருச்சி மாவட்டம், அல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் பாரதி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.
உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து பள்ளி ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
பிறகு முக்கொம்பு அணையை பார்வையிட்ட அவர், நீர் வரத்து குறித்தும் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுவது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
Comments