இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரண்டு அடுக்கு மெட்ரோ பாலம் அமைகிறது..

0 580

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் 2026-ல் இரண்டடுக்கு மெட்ரோ ரயில் பாலம் சென்னையில் அமைய உள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாதவரம் முதல் சோளிங்கநல்லூர் வரை செல்லும் 4ஆவது வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செல்லும் 5ஆவது வழித்தடமும் ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், காரம்பாக்கம் வழியாக செல்கிறது.

இந்த வழித்தடத்தில் 4 ரயில் நிலையங்களுடன் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு இரண்டடுக்கு மெட்ரோ பாலம் அமைய உள்ளது.

தரை மட்டத்திலிருந்து 50 அடி உயரத்திற்கு நான்காம் வழித்தட  பாலமும், 70 அடி உயரத்தில் ஐந்தாம் வழித்தட பாலமும் ஒன்றின் மேல் ஒன்றாக ஒரே தூணில் அமைகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments