வயநாடு நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... 96 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

0 582

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270ஐ கடந்த நிலையில், மேப்பாடி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 129 சடலங்களில் 96 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 பேரின் உடல் பாகங்கள் மட்டும் கிடைத்துள்ளதால், உடற்கூராய்வு மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்த மேப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறவினர்கள் காத்திருக்கின்றனர். தனது பெற்றோரை காணவில்லை என தேம்பி அழுத சிறுவனை, சக சிறுவர்கள் தேற்றியது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments