பொலிவியாவில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு... லாரி, பேருந்து ஓட்டுநர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்
பொலிவியாவில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடை கண்டித்து லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இயற்கை எரிவாயு உற்பத்திக்கு பெயர் பெற்ற பொலிவியா, தனது 50 சதவீத பெட்ரோல் தேவைகளுக்கும், 80 சதவீத டீசல் தேவைகளுக்கும் வெளிநாடுகளை சார்ந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்ததால், பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவில் இருந்து டீசல் ஏற்றி வரும் கப்பல்கள் மோசமான வானிலையால் துறைமுகம் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தட்டுப்பாடு மேலும் அதிகரித்து, பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடக்கின்றனர்.
Comments